Wednesday, April 22, 2020

முதுமை


என் தாயையும் சுமந்தாய்.....

அவளுடைய சேயையும் சுமந்தாய்.....

 சுமந்த சேயும் தாயானள்...

காலம் அனைத்து சுமைகளையும்

 சுகமாக்கிது

 என் தாயின் முந்தானைகூட படுத்து

 உறங்கியது இல்லை

நான்  பருவம்சமஞ்சதும்,

தாய்மை அடைந்தும் முதலில் நீ

 சோல்லியே நான் அறிந்தேன்

பிறந்தும் தாயை கொன்ற பாவி என்று

 என்னை பழிக்கிறார்கள்

என் தோப்புல் கொடி அருக்கும்போது

 என் தாய் நான் தாயக உன்னை வளர்ப்பதை விட என் தாயே வளர்த்தால்

 நீ நான் பொற்ற இன்பத்தை முழுமையாய்  பெருவாய் .... என்று

 எண்ணினாளோ....?

நீ செல்மகளே 

உன் உருவில் நானும்

மறுமுறை ஒருமுறை என் தாயின் மடியில் தவழும் பாக்கியம் பொற்றேன்

என்றளோ.....?
யாருக்கு இந்தபாக்கியம்வாய்க்கும்

           " பாசகாரபாட்டி"

                                   -தினைஷ்.சே
             

Tuesday, April 21, 2020



அவளே அவளே...!!!

பார்த்ததும் சிரித்ததும்.....!

முத்துமுத்தாய் மொழிந்ததும்.,......!

 ஓரக்கண்ணில் ஒளிந்தது பார்த்ததும்.....!

ஓராயிரம் கனா கண்டதும்.....!

மழலை மொழியில் மாமா மாமாஎன்றதும் .......!

படித்ததில் பிடித்ததும்....!

பேசும்போது இடித்ததும்......!

பாசமாய் பேசியதும்......!

பக்கத்தில் நின்று படம் பிடித்ததும்......!

 முத்தமிட்டு மோதிரம் இட்டதும்  அவள்தான் அவள் மட்டும் தான்......!
     



         -தினேஷ்.சே

Monday, April 20, 2020




 யாழ் நீ.........
இது உறவுக்கும் பிரிவுக்கும் இடையே இடிப்பட்டு கிடக்கும் காதல் கதை....!
காதலா .…....?
காமமா .......?
இச்சையா .......?
சசையா ........?
இதுவா எதுவா என அறியாமுடியவில்லை....
என் அன்னையின் மீது உள்ள காதல் அளவு சொல்லால் அளக்க முடியுமானால் அன்றே உன் மீது கொண்ட காதலை உறக்க ஊராருக்கு சொல்லி இருப்பேன்....,.....!
காதல் கவிதை எழுத தெரிந்த எனக்கு இறுதியில் என் பெயர் எழுத தெரியவில்லை......!
நான் என்னை உணர்ந்ததும் உன் இடத்தில் தான் .......!என்னை தொலைத்ததும் உன் இடத்தில் தான் ......!
என் உதிரம் உறையும் ஒருநாள் அன்று இந்த கடிதத்தை உன்னிடம் சேர்ப்பேன்......!
உறங்காத என் மனதுக்கு பக்கத்தில் நீ அழும் தருனம் அது...!
பல முறை ஒரு முறை  பள்ளி நம்மை இணைத்து....!
படிப்பு நம்மை பிரித்தது
பருவங்கள் மாறியது பல காதல் தன்னை சீன்டியும் தாண்டியும் சென்றது ஆனால்....
காதல் என்ற வார்த்தை என் செவிவந்து சேரும் முன்பே ...
என் இமைகளுக்கு இடையில் நீ நிங்காத ஒளியாய் வந்து விடுகிறாய்....
உன்
அலைபேசியின் அழைப்புக்கு முன் என்னை உன் எண்ண அலைகள் ஆற்பரித்து விடுகிறது
உன் மீது கொண்ட காதலை தோப்பாக தொகுக்க நினைக்கிறேன் ஆனால் எனோ தனிமரம் போல தவிக்கிறேன்....
உன் பலமுறை சந்தித்தது இல்லை
நீ எனக்கு அவ்வளவு பரிட்சயமும் இல்லை...
என் காதலுக்கு எந்த சாட்சியும் இல்லை...
நீ என் தோல்சாந்து தோழமை தந்தாய்..
என் தயக்கத்தால் நான்  கோழையாகவே போனேன்.....
உன்னை பலமுறை பரிட்சித்தும் இருக்கிறேன் ....
உன்னோடு பயணப்பட நினைத்தேனே தவிர  மணக்க வேண்டும்  என்பது அன்று மறந்தே போனேன்.....
ரகசியமாய்
இந்த  அழகான ராட்சசி யை ரசித்தேன்  ....
சாக்கு இல்லாது சண்டை இட்டேன்...
கண்களாளே சைகை செய்தேன்....
அவள் ஊட்டிவிடும் ஒரு கைபிடி உணவுக்காக காத்துகிடந்தேன்...
அவள் கைகுளுக்கவே காலையில் முதலில் வந்தேன்....
கடைசிவரை காத்து கிடந்தேன் ....
அவள் துலைத்த அந்த கைக்குட்டையை வாங்க வருவாள் என்று....
அடுத்பிறப்பு என் ஒன்று உள்ளது எனில் அவள் சூடி கொடுத்த மலராக மரணிப்பேன்....
உன்னிடம் என் காதலை நான் வெளிப்படுத்தியிருந்தால்...என் வாழ்வு வரமாகியிருக்குமோ...
சாபமாயிருக்குமோ.... யாருக்கு யார் சாட்சியோ...
சத்தியம் செய்வேன் சொல்லாத காதல் என்பதால் தான் என் கண் பார்வை குறையும் தருணத்திலும் உன்னை நினைத்து பார்க்கிறேன்.....
பக்கத்தில் என் தோல் சாந்து கிடக்கும் என் மனைவிக்கு சொல்லி சிரித்து கெண்டு இருக்கிறேன்
அந்த பற்கள் இல்லாத பாசக்காரி...... தான் எனானை ஆளும் விட்டுகாரி.....
கட்டவிரலில் கயிரு கட்டும் காலம் நெருங்குகின்றது...
கடமைகள் முடிந்து காடு செல்லபோகிறேன் ....
ஆனால்.....
என் கண்ணின் ஓரம்...
கண்ணீராய்....கரைந்து கொண்டு இருக்கிறாய்...
நான் வாழ்நாளில் மீட்டமுடியாத யாழ்நீ ....
உன்னிடத்தில் இருந்து என் மனதை மீட்டெடுக்க முயல்கிறேன்.....
மிச்சம் வைக்காமல் .....உன் நினைவுகளை என்னோடு எடுத்து செல்கிறேன்.....
உடல் உரங்க செல்கிறது.....
மனம் மட்டும்..,.மறுபடியும்
யாழ்நீ....

        ‌‌‌‌.          _  தினேஷ் .சே




கைத்தறி காதலனின் கடைசி நிமிடங்கள்.....

பருத்தி பஞ்சு  எடுத்து .....!
கருகமணி சேக்கும்  கயிறாக்கி...!
பஞ்சு குணம் மாற்ற
  பஞ்சும்  பாழாகி போகம...!
நூலுக்கு நோகாம....
பசை போட்டு...!
ரக ரக மா பேரு வச்சு...
ரங்கோலி சாயம் போட்டு...!
பச்ச புள்ளையாட்டும்  சாயுங்கால
வெயிலில் போட்டு வாட்டி எடுத்து....!
இரெண்டு சக்கர வண்டி பூட்டி ....
கட்டு நூல கட்டி எடுத்துக்கிட்டு வருயல....!
கடகடவென  ஆடும் கட்டு நூலு அழகு இருக்கே...!
அது என்னனு சொல்ல...?
எடுத்த  வந்த நூல எடுத்து பிரிச்சு... தாராக்கி.....
தார தறிக்குள்ள   சேக்குறத்துக்குள்ள....!
நான் படும் பாட்ட
என்று சொல்ல...!
அரை வயிறு கஞ்சி குடிச்சு...
அயராது நாளு முழுசும் நெச்சாலும்....
அற ஜன் நெஞ்சு முடிக்கிறதுக்குள்ள என் நெஞ்சு முடி நினைச்சு போச்சே....!
செய்யும் தொழில் யாவும் நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை...
இன்று எம் பாட்டன் சொன்னது நினைவுக்கு வந்துடுச்சே...!
பார்த்து பார்த்து நெச்சாலும் 
பஞ்சு எல்லாம் நஞ்சாகி... நெஞ்சுக்குள்ள போய் நின்னுகிச்சே...!
மத்தவ மானத்தோடு வாழ ....
இந்த மகத்தான தொழிலை கைபிடிச்ச....!
மானத்தோடு வாழ வேண்டிய என் மக்களெல்லாம் இப்போ மடிப்பிச்சை கேட்டு நிக்குதய்யா....!
நூலு தராம் பாக்க தெரிந்த எனக்கு...
மனுசகுள்ள  நெறம்   பார்க்க தெரியலையேப்பா...!
கஷ்டபடுத்துதேனு கட்டும் தறியே வேண்டாம்னு கட்டி போட்டாலும்...
கட்டுனா அவளுக்கு கஞ்சி ஊத்தவும்..
பெத்த மக்கள் கறைசேக்கவும்....
இந்த கட்டு தறிய விட்டால் வேறு கதி இல்லையப்பா...!
கலம் முழுசும் இப்படியே
கடந்து போனாலும்...
கட்டவிரல் ரெண்டு சேர்த்து
கட்டு காலம் வந்தாலும்....!
கட்டையில போகும் போதும்
ஒரு ஜான் கட்டும் துணையோடுதான்
போகனும் சாமி.....!

                                            -தினேஷ் சே
                                             4/5/20


"மென்பொருளை மற மண் பொருளுக்கு மாற....!", - பிரதிலிபியில் படிக்க : https://tamil.pratilipi.com/story/7p4xp2uvhycz?utm_source=andr...